Sakshi Agarwal: ஷாக்‌ஷி அகர்வாலின் பர்த்டே செலிப்ரேஷன்... தாய்லாந்தில் ஹஸ்பண்டுடன் ரொமான்டிக் ட்ரிப்

Sakshi Agarwal: ஷாக்‌ஷி அகர்வாலின் பர்த்டே செலிப்ரேஷன்... தாய்லாந்தில் ஹஸ்பண்டுடன் ரொமான்டிக் ட்ரிப்

சென்னை: நடிகையும், பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடையே அதிகம் பிரபலமானவருமான ஷாக்‌ஷி அகர்வால் தனது பிறந்தநாளை இந்த முறை தாய்லாந்தின் பாங்காக்கில் கணவருடன் கொண்டாடியுள்ளார். இது அவரது 36ஆவது பிறந்தநாள்அந்த ட்ரிப்பில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அவை தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ஷாக்‌ஷி அகர்வாலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதன் பிறகு தொடர்ந்து படங்கள், வெப் ப்ராஜெக்ட்ஸ், போட்டோஷூட்கள், பிராண்ட் கொலாபரேஷன்கள் என பிஸியாக இருந்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

இந்த நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு பாங்காக்குக்கு சென்றிருந்த ஷாக்‌ஷி, கணவருடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படங்களையும், தனியாக எடுத்த கிளாமர் ஸ்டில்களையும் பகிர்ந்துள்ளார். லிப்டில் எடுத்த செல்ஃபி, நைட் லைஃப், டுக்-டுக் வாகனத்தில் போஸ், பர்த்டே கேக் வெட்டும் தருணம் என பல புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

Sakshi Agarwal Celebrates Birthday in Bangkok With Husband Romantic Vacation Photos Go Viral

பிறந்த நாள் செலிபிரேஷன்: அந்த புகைப்படங்களுடன், "Bangkok... you were a little too convincing. Came back with memories, 4,000 photos, questionable sleep, and absolutely no regrets. Until the next adventure." என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். பாங்காக் ட்ரிப் மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன் திரும்பியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஷாக்‌ஷியின் இந்த பர்த்டே பதிவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி சின்னத்திரை மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். "ஹேப்பி பர்த்டே", "ஸ்டன்னிங்", "க்யூட் கப்பிள்", "பியூட்டிஃபுல் மெமரீஸ்" போன்ற கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

ரசிகர்களுடன் டச்: கடந்த சில ஆண்டுகளாக படங்களை விட சமூக வலைதளங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் ஷாக்‌ஷி அகர்வால், தொடர்ந்து பிராண்ட் புரமோஷன்கள், ஃபேஷன் போட்டோஷூட்கள் மற்றும் டிஜிட்டல் கொலாபரேஷன்கள் மூலமும் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்த பர்த்டே ட்ரிப் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

LATEST News

Trending News