பிக் பாஸ் ஜூலியின் திருமணம் முடிந்தது.. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு இணையத்தில் வைரலானவர் ஜூலி. இதன்பின் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கடும் விமர்சனங்களையும் ஜூலி எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், பெரிதளவில் மக்கள் மத்தியில் இவருக்கு கவனம் கிடைக்கவில்லை.

கடந்த சில வாரங்களுக்கு முன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் ஜூலி. இதன்பின் திரையுலக நட்சத்திரங்கள் நேரில் சென்று சந்தித்து தனது திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், தற்போது ஜூலி - இக்ரீம் திருமணம் சென்னையில் மிகவும் விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. ரசிகர்கள் ஜூலிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.