நடிகை ஊர்வசியின் மகளை பார்த்துள்ளீர்களா.. மலையாளத்தில் நடிகையாக அறிமுகம்.. புகைப்படம் இதோ
தென்னிந்திய சினிமாவின் பெருமைக்குரிய நடிகைகளில் ஒருவர் ஊர்வசி. இவர் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தற்போது முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நடிகை ஊர்வசிக்கு ஒரு மகள் உள்ளார். அவருடைய பெயர் தேஜலட்சுமி. இவர் தற்போது நாயகியாக என்ட்ரி கொடுக்க உள்ளார்.

மலையாளத்தில் உருவாகும் சுந்தரியாயவள் ஸ்டெல்லா என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ள தேஜலட்சுமி பாப்லோ பார்ட்டி என்ற படத்தில் தனது அம்மாவுடன் இணைந்தும் நடித்துள்ளாராம்.
சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார் தேஜலட்சுமி. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாக ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

