சாரா அர்ஜுனுக்கு அந்த இடத்தில் ஏன் முத்தம்!! சீனியர் நைகர் கொடுத்த விளக்கம்..
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக்ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் தான் துரந்தர். படம் வெளியாகி ரூ. 400 கோடிகளுக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது மேடையில் வந்த மூத்த நடிகர் ராகேஷ் பேடி, சாரா அர்ஜுனின் தோள் பட்டையில் முத்தம் கொடுத்தார்.
படத்தில் சாராவின் அப்பா ரோலில் நடித்த ராகேஷ் பேடி செய்த செயல் இணையத்தில் வைரலாகி அவரை விமர்சித்து வந்தனர். இந்த சம்பவம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில், ராகேஷ் பேடி அதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
அதில், சாரா என் பாதி வயது, மகள் ரோலில் நடிக்கிறார், மகள் தந்தையை அணைப்பதைப்போல் தான் அவர் என்னை அன்புடன் அணைப்பார்.

திரையிலும் பிரதிபலிக்கும் நல்லுறவு எங்களுக்கிடையே நிஜத்திலும் இருக்கிறது. வழக்கமான வாழ்த்து முறையில் இருந்து மாறானது அல்ல, அங்கே உள்ள பாசத்தை மக்கள் பார்க்கவில்லை, பார்க்கும் நபரின் கண்ணில் தவறு இருந்தால் என்ன செய்யமுடியும்? குடும்பத்தினர் முன்னிலையில், பொது மேடையில் நான் ஏன் தவறாக நடக்கவேண்டும் என்று காட்டமாக கூறியிருக்கிறார்.