தினமும் 10 இட்லி, 10 தோசை சாப்பிடுவேன்.. 10 மாதத்தில் 10 கிலோ குறைத்தேன்.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் ரிவால்வர் ரீட்டா. இப்படத்தில் ராதிகா சரத்குமார், அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

வருகிற 27ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. இதை தொடர்ந்து அக்கா எனும் வெப் தொடரில் நடித்திருக்கிறார். மேலும் கண்ணிவெடி, ரவுடி ஜனார்தன் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
இந்த நிலையில், சமீபத்தில் ரிவால்வர் ரீட்டா படத்தின் புரோமோஷன் பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசியது படுவைரலாகி வருகிறது.

இதில், "நான் குண்டாக இருந்தபோது அழகாக இருந்தேன் என்பார்கள். அப்போது 10 தோசை, 10 இட்லி சாப்பிடுவது போல் இருந்தது. உடற்பயிற்சி செய்தேன், பின்னர் உணவை கட்டுப்படுத்தியதால் 10-12 மாதங்களில் சுமார் 10 கிலோ குறைத்தேன். நடிப்பதை தாண்டி, ஆரோக்கியமே முக்கியம் என்று நம்புகிறேன். யோகா எனக்கு அமைதியும், உடல் உறுதியும் கொடுத்தது. அதையே தொடர்ந்து செய்ததால்தான் என்னை ஆரோக்கியமாகவும், எடை குறையவும் உதவியது" என கூறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.