விஜய் தேவரகொண்டாவுடன் முதல் முத்தம், பதட்டமாக இருந்தேன்.. நடிகை ராஷ்மிகா ஓபன்!
நேஷனல் கிரஷ் என ரசிகர்கள் இவரை அழைத்து வரும் நிலையில், இந்திய சினிமாவின் வசூல் நாயகியாகவும் மாறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.
இந்நிலையில், சினிமாவில் தனது முதல் முத்தம் குறித்து பேட்டி ஒன்றில் ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.
அதில், "என் சினிமா வாழ்க்கையில் நான் கொடுத்த முதல் முத்தம் 'கீதா கோவிந்தம்' படத்தில்தான். சக நடிகருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றபோது இயல்பாகவே என் மனதில் குழப்பம் ஏற்பட்டது.
அதேபோல் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் இருந்ததாக பிறகு நான் தெரிந்துகொண்டேன். அது எங்கள் தொழில்முறைக்கு அவசியம். கதைக்கு தேவைப்படும்போது முத்த காட்சியை ஏற்று நடிப்பது நடிப்பின் ஒரு பகுதியாகும்.
அதிலும், கீதா கோவிந்தம் படத்தில் நானும் விஜய் தேவரகொண்டாவும் நடித்தது திருமணமான தம்பதிகளாக. திருமணமான கணவன் - மனைவி செய்யும் அனைத்தையும் நாங்கள் சினிமாவில் செய்ய வேண்டும்.

அது இயல்புதான். விஜய் தேவரகொண்டாவுடன் முத்தக்காட்சி எடுத்தபோது நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். ஏனென்றால், எண்னை பொறுத்தவரை முத்தம் என்பது மிகவும் தனிப்பட்ட மற்றும் உணர்வுபூர்வமான விஷயம்.
அதனால் இயல்பாகவே எனக்கு மிகவும் கவலை ஏற்பட்டது. அதிலும் படப்பிடிப்பு தளத்தில் 200க்கும் மேற்பட்டோர் இருப்பார்கள். அவர்கள் முன்னிலையில் முத்தம் கொடுப்பது மிகவும் கடினமாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.