அந்த யூடியூபருக்கும் எனக்கு அப்படி நிறைய பிரச்சனை!! நடிகை பிரியா ஆனந்த்..
தமிழில் வாமனன், புகைப்படம் போன்ற படங்களில் நடித்து அறிமுகமாகி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த்.
சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல் படத்தில் ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரியா ஆனந்த், சமீபத்தில் சுமோ, அந்தகன், லியோ போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது கன்னட மொழியில் பலராமணா தினகலு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிரியா ஆனந்திடம், கெளரி கிஷனிடம் யூடியூபர் ஒருவர் கேட்ட மோசமானகேள்வி பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டது.
அதற்கு பிரியா, நடிகைகளிடம் அப்படி கேட்பது நீண்டகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த யூடியூபர் பற்றி எனக்குத் தெரியும், அவருக்கும் எனக்கும் நிறைய பிரச்சனைகள் வந்திருக்கிறது, முதல் அந்தமாதிரி கமெண்ட்ஸ் செய்யமுடியாது. இந்த மாதிரி ஆட்களை இத்தனை நாட்கள் இப்படி பேசவே விட்டிருக்கக்கூடாது. பார்க்கும் வேலைக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அந்த வேலையை வைத்துதானே குடும்பத்தை காப்பாற்றுகிறோம் என்று பிரியா ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.