பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம்.. இயக்குநர் ராஜேஷ் ஓப்பன் டாக்

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம்.. இயக்குநர் ராஜேஷ் ஓப்பன் டாக்

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி 2010ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன். காமெடி கலந்த ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் ஆர்யா - சந்தானம் இணைந்து நடித்திருந்தனர்.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்க சுப்பு பஞ்சு அருணாச்சலம், லட்சுமி ராமகிருஷ்ணன், சித்ராலட்சுமணன், விஜயலக்ஷ்மி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

 

 

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம்.. இயக்குநர் ராஜேஷ் ஓப்பன் டாக் | M Rajesh Talk About Boss Engira Baskaran Part 2

15 ஆண்டுகளை கடந்தாலும், இப்படத்தை இன்று பார்க்கும்போது அனைவரும் ரசிக்கிறார்கள். இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில், சமீபத்தில பேட்டி ஒன்றில் பாஸ் என்கிற பாஸ்கரன் படக்குழுவில் இருந்து இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் சிலர் கலந்துகொண்டனர். இந்த பேட்டியில் பாஸ் என்கிற பாஸ்கரன் எப்போது என அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம்.. இயக்குநர் ராஜேஷ் ஓப்பன் டாக் | M Rajesh Talk About Boss Engira Baskaran Part 2

அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் "ஆர்யாவும் நானும் இணைந்து அதற்கான முயற்சி போய்க்கொண்டு இருக்கிறது. கூடியவிரைவில் வரலாம்" என கூறினார். இதன்பின் பேசிய இயக்குநர் ராஜேஷ் "அருமையான ஸ்கிரிப்ட் இருக்கிறது. ஆர்யா, நயன்தாரா, சந்தானம் அனைவரும் சேர்ந்து அமைந்தால் கண்டிப்பாக ஒர்க் ஆகும்" என அவர் கூறியுள்ளார். 

LATEST News

Trending News