ஷாலு ஷம்முவை படுக்கைக்கு கூப்பிட்ட முன்னணி இயக்குனர்.. ஓபனாக போட்டுக்கொடுத்த அம்மணி
வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு. தற்போது பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளப் பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஷாலு ஷம்மு நடிப்பில் கடைசியாக வெளியாகி கேவலமான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் இரண்டாம் குத்து. இதில் ஷாலு ஷம்மு இரட்டை அர்த்த வசனங்களை பேசி படு கேவலமாக காட்சிகளில் நடித்திருந்தது பல விமர்சனங்களை உண்டாக்கியது.
அதுமட்டுமில்லாமல் ஷாலு ஷம்மு அவ்வப்போது ஆண் நண்பர்களுடன் நடனப் பயிற்சி கற்றுக் கொள்ளும் நெருக்கமான வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் அளவுக்கு விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஷாலு ஷம்மு சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் மீடு பிரச்சனையில் மாட்டி உள்ளீர்களா? எனக் கேள்வி கேட்டார்.
அதற்கு ஷாலு ஷம்மு, கொஞ்சமும் தயங்காமல், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிப்பதற்காக அந்த படத்தின் இயக்குனர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
shalu-shammu-
மேலும் படுக்கைக்கு வர மறுத்ததால் சில பட வாய்ப்புகளையும் இழந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள், இந்த மாதிரி பட வாய்ப்புகளுக்காக மோசமான உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டால் யார் வேண்டுமானாலும் தவறாக பேசத்தான் செய்வார்கள் என ஷாலு ஷம்முவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.