குக் வித் கோமாளி பவித்ரா வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்.. விபத்து பற்றி உருக்கமாக கூறிய நடிகை

குக் வித் கோமாளி பவித்ரா வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்.. விபத்து பற்றி உருக்கமாக கூறிய நடிகை

சின்னத்திரையில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதில் குக்காக கலந்து கொண்டு போட்டியிட்டு வருபவர் தான் இளம் நடிகை பவித்ரா லட்சுமி.

இவர் தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட விபத்து ஒன்றை பற்றி பேசியுள்ளார்.

இதில் பேசிய நடிகை பவித்ரா " என் வாழ்க்கையில் கஷ்டப்பட்ட காலத்துலயும், நம்பிக்கை கொடுத்து வழிகாட்ட பெரிதும் குடும்ப உறவுகள் இல்ல ".

" நான் மறக்க நினைக்கும் அந்த விபத்து முதல் எனக்கு ஏற்பட்ட ஒவ்வொரு தடையையும் நானா போராடித்தான் கடந்து வந்திருக்கேன் ஒரே பெற்றோராக என்னோட வளர்ச்சிக்கு அம்மாதான் ரொம்பவே ஊக்கமா இருந்திருக்காங்க ".

" அதனால, காலேஜ் காலட்டத்துல இருந்து என் பெயருக்குப் பின்னால என்னோட அம்மா லட்சுமியின் பெயரையும் பயன்படுத்துறேன். என்னோட அம்மாவுக்கு நான் கொடுக்கும் ஆத்மார்த்தமான மரியாதை இது ".

LATEST News

Trending News

HOT GALLERIES