செல்வராகவன் பார்த்து மிரண்டு போன ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர்.. அகோரி தனுஷ் வேற லெவல்!

செல்வராகவன் பார்த்து மிரண்டு போன ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர்.. அகோரி தனுஷ் வேற லெவல்!

செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக தோல்வி அடைந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருவதால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக அறிவித்தனர்.

இந்த படத்தில் தனுஷ் நடிப்பதை ரசிகர்கள் வரவேற்றாலும் கார்த்தி மற்றும் ஜிவி பிரகாஷ் போன்றோர் இல்லாதது படத்திற்கு பெரும் பின்னடைவுதான் எனவும் கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆயிரத்தில் ஒருவன் 2 படம் 2024 ஆம் ஆண்டுதான் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர். ஆனால் அதற்கு முன்னரே கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம் செல்வராகவன்.

 

இந்நிலையில் அனைவருமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படமான ஆயிரத்தில் ஒருவன் 2 படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகப் போவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்களுடைய கைவண்ணத்தில் பல போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் செல்வராகவனை அசத்திய போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அகோரி வேடத்தில் தீவிர சிவபக்தராக இருக்கும் தனுஷ் புகைப்படமானது லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.

 

aayirathil-oruvan-2-cinemapettai

aayirathil-oruvan-2

சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தை தொடர்ந்து அடுத்ததாக செல்வராகவன் நடிகராக அவதாரம் எடுத்துள்ள சாணிக் காகிதம் படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES