சமந்தாவை அழைத்த அரசியல் புள்ளி!! கட்டாயப்படுத்தியது உண்மையா? சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலம்..
தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா சில நாட்களுக்கு முன், மாதாப்பூர் அருகே ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அரங்கம் அண்மையில் இடிக்கப்பட்டது.
முந்தைய ஆட்சியின்போது அந்த கட்டடத்தை இடிக்காமல் இருக்க, சமந்தாவை தமது ஆசைக்கு இணங்க வைக்க வேண்டும் என அப்போது அமைச்சராக இருந்த கே.டி. ராமாராவ் கூறியதாகவும்.
அதற்கு நாக சைதன்யாவின் குடும்பமே சமந்தாவிடம் அதனை வலியுறுத்தியதாகவும் அமைச்சர் கொண்டா சுரேகா என்று கூறியது பெரியளவில் வெடித்து வருகிறது. அமைச்சர் இப்படி சமந்தாவை இழிவுப்படுத்தி பேசியதை, நாகர்ஜுனா முதல் ஆளாக கண்டித்து கருத்தினை போட்டார்.
அவரை தொடர்ந்து சமந்தா, நாக சைதன்யா, அமலா, நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளீட்ட பலரும் அமைச்சருக்கு எதிராக கண்டித்தபடி கருத்துக்களை தெரிவித்தனர். அதன்பின் தான் வாய்த்தவறி பேசிவிட்டதாக கூறி மன்னிப்பும் கேட்டிருக்கிறார் கொண்டா சுரேகா.
தமிழா தமிழா பாண்டியன்
இந்நிலையில் தமிழா தமிழா பாண்டியன் அளித்த பேட்டியொன்றில், ஒரு நடிகை பிரபலமாக வளர்ந்துவிட்டால், பணத்தை பாதுகாக்க கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களிடம் நட்பு காட்டுவது இயற்கையாகவே வந்துவிடும். உதாரணத்திற்கு சமந்தா உட்பட அனைவருக்குமே கோடியில் பணம் குவிந்துவிடும். அப்படி பணம் குவியும் போது நிலம், அப்பார்ட்மெண்ட், திராட்சை தோட்டம் என வாங்கிகுவிப்பார்கள். அவற்றை எல்லாம் பாதுகாக்க ஒரு அரசியல் பாதுகாப்பு, அதிகாரிகள் பாதுகாப்பு தேவை.
அந்த சூழலில் தான் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகனான கே. டி. ராமாராவுடன் தொடர்பு ஏற்படுத்தினார். இந்த தொடர்பு, தொடர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் கணவர் நாக சைதன்யாவுக்கு தெரியாமல் அவருடன் தொடர்பில் இருந்தார். ஏன் என்றால் அவருக்கு கணவரைவிட சொத்துத்தான் முக்கியம்.
அவற்றை பாதுகாக்கத்தான் சமந்தா அவருடன் நட்பில் இருக்கிறார். அவரின் பினாமி பெயரில் தான் சொத்துக்கள் இருக்கிறது. ஆனால் அமைச்சர் சுரேகா, சமந்தாவை நாகர்ஜுனா, நாக சைதன்யா என ஒட்டுமொத்த குடும்பமும் கட்டாயப்படுத்தி அவருடன் இருக்க சொன்னதாக சொல்லி இருக்கிறார்கள்.
அரசியல் ரீதியாக குடும்பத்தை சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக கொண்டா சுரேகா அப்படி சொல்லி இருக்கிறார். ஆனால் அதில் உண்மை இல்லை. கே.டி. ராமாராவுடனான நட்பை துண்டிக்க சொல்லியும் சமந்தா கேட்காததால் தான் விவாகரத்து நடந்தது. விவாகரத்துக்கு காரணம் இதுதான் என்ற குண்டை தூக்கிப்போட்டுள்ளார் தமிழா தமிழா பாண்டியன்.