தனுஷ், நாகார்ஜுனா கூட்டணியின் ‘குபேரா’…. புதிய போஸ்டர் வெளியீடு!

தனுஷ், நாகார்ஜுனா கூட்டணியின் ‘குபேரா’…. புதிய போஸ்டர் வெளியீடு!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் கடைசியாக இவரின் நடிப்பில் ராயன் திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.

 

அதேசமயம் இவர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது தனுஷின் 51வது படமாக உருவாகி வருகிறது. இதில் நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ராஷ்மிகா மந்தனாவும் இவர்களுடன் இணைந்து நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். மும்பை தாராவியை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகாவின் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 7) விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக குபேரா படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.தனுஷ், நாகார்ஜுனா கூட்டணியின் 'குபேரா'.... புதிய போஸ்டர் வெளியீடு!

எனவே ரசிகர்கள் பலரும் ராயன் படத்திற்கு பிறகு தனுஷின் அடுத்த பிளாக்பஸ்டர் தயாராகி வருவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

தனுஷ் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்ததாக தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் நாகார்ஜுனா தற்போது ரஜினியின் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES