நடிகர் சங்கத்துல இருந்துட்டு.. விஜய் பத்தி கருணாஸ் இப்படி பேசலாமா..
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கருணாஸ் இப்படி பேசலாமா என பத்திரிகையாளர் சேகுவேரா காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
யோகி பாபு விவகாரம், விஷால் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சேகுவேரா தமிழ் பிலிமிபீட்டுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். நடிகராக இருந்துக் கொண்டு அதே குடும்பத்தில் இருந்து ஒரு நடிகர் அரசியலுக்கு வருகிறார் என்கிற போது சப்போர்ட் செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை இப்படி எதிர்த்து பேசக் கூடாது என்றார்.
விஜய் அரசியலில் சாதிக்க மாட்டார் என்றும் அது அவருக்கு தேவையற்ற வேலை என்றும் ரசிகர்கள் பலம் அரசியலில் செல்லுபடியாகாது என்றும் கருணாஸ் பேசிய நிலையில், அவருக்கு எதிரான கருத்துக்களை சேகுவேரா கூறியுள்ளார்.
சினிமாவில் பெரிய நடிகர் விஜய்யா? உதயநிதியா? என்று கேட்டால் நிச்சயம் அனைவரும் விஜய் தான் என்பார்கள். ஆனால், அரசியலில் அதே கேள்வியை எழுப்பினால் உதயநிதிதான் என்பார்கள். விஜய் அரசியலில் பெரிதாக வளர்ச்சியடைய முடியாது என கருணாஸ் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சினிமா ரசிகர்களை நம்பிக் கொண்டு நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார். ஆனால், சினிமா படத்துக்கு வரும் கூட்டமெல்லாம் அப்படியே விஜய்க்கு ஓட்டுப் போடுவார்கள் என்று நினைப்பது ரொம்ப பெரிய தவறு அதை அரசியலுக்குள் விஜய் ஒரு தேர்தலை சந்தித்தாலே நன்றாக புரிந்துக் கொள்வார் என கருணாஸ் பேசிய நிலையில், அவரது கருத்துக்கு பத்திரிகையாளர் சேகுவேரா பதிலடி கொடுத்துள்ளார்.
சினிமாவில் நடிகர் சங்கத்தில் பொருளாளராக இருக்கும் நடிகர் கருணாஸ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் விஜய் குறித்து இப்படி பேசுவது மிகப்பெரிய தவறு. விஜய்யின் அரசியல் வருகை புடிக்கவில்லை என்றால் தனிப்பட்ட முறையில் கருணாஸ் தனது கருத்துக்களை சொல்லியிருக்க வேண்டும் என்றும் நடிகர் சங்கத்தில் இருந்து விலகி விட்டு பின்னர் அவர் பேசியிருந்தால் அது பிரச்சனையை கிளப்பியிருக்காது என்றும் விளாசியுள்ளார் சேகுவேரா. கருணாஸ் பற்றி பேச வேண்டுமென்றால் முதலில் கூவத்தூர் பற்றிய ஃபைலை தான் எடுக்க வேண்டும் என்றும் சேகுவேரா குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.