அந்த படத்துக்கு அப்புறம் நாங்க நெருக்கமாகிட்டோம்

அந்த படத்துக்கு அப்புறம் நாங்க நெருக்கமாகிட்டோம்

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகைகளில் ஒருவர் நடிகை நிகிலா விமல்.

வெற்றிவேல், கிடாரி, தம்பி, ரங்கா, போர் தொழில் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து மலையாளம் மற்றும் மலையாள சினிமாவில் நடித்தும் வருகிறார்.

சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எனக்கும் நடிகர் பேசில் ஜோசப்புக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கிறது. அவரும் என்னை கிண்டல் பண்ணுவார், பதிலுக்கு நானும் அவரை கேலி செய்வேன்.

'குருவாயூர் அம்பல நடையில்' படத்தில் இருந்துதான் அவர் பழக்கம். அதன்பின் நெருக்கமான ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். இந்தி படம் மாதிரியான பெரிய வாய்ப்புகள் கிடைக்கிறதை பார்க்கும் போது நம்ம ப்ரெண்ட் ஒருத்தர் பெரிதாக சாதிக்கிறார் என்று சந்தோஷமாக இருக்கிறது என்று நிகிலா விமல் தெரிவித்துள்ளார்.

அந்த படத்துக்கு அப்புறம் நாங்க நெருக்கமாகிட்டோம், வாழை பட நடிகை நிகிலா ஓப்பன் டாக்.. | After That We Became Close Friends Nikila Vimal

LATEST News

Trending News

HOT GALLERIES