அரசியல் பிரமுகருக்கே டாடா காட்டிய நடிகை
சினிமாவில் ஒரே நடிகருடன் இரண்டு மூன்று படத்தில் நடித்து விட்டால், அந்த நடிகருடன் கிசுகிசுக்கப்படுவதெல்லாம் சகஜமான ஒன்று. அதுவும் இல்லாமல் பல நடிகை இப்போது, அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். இப்படி சினிமா நடிகைகள் பலர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நடிகை ஒருவர், நெருங்கி பழகி வந்த அரசியல் பிரமுகருக்கு டாடா காட்டி உள்ளார்.
கிராமத்து கதை அம்சம் கொண்ட இயக்குநர் ஒருவரின் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் அந்த சிட்டெறும்பு நடிகை. இவர் நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால், சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார் அந்த நடிகை. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மற்ற மொழி திரைப்படத்திலும் நடித்து தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார். அந்த நேரத்தில் தான், அந்த சிட்டெறும்பு நடிகைக்கு அரசியல் பிரமுகர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட நடிகை அமைச்சருடன் ஓட்டலில் இரண்டு நாட்கள் தங்கி உள்ளார். இந்த தொடர்பு நெருக்கமாகி இருவரும் ஒரே வீட்டில் இருந்தனர். இது பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்பட்டது. இருப்பினும் இதுகுறித்து நடிகை வாய் திறக்காமல் மௌனமாக இருந்தார். அப்போது தான், அந்த சிட்டெறும்பு நடிகைக்கு பிரம்மாண்ட இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் ஒரு காட்சியில், சிட்டெறும்பு நடிகை கவர்ச்சியாக நடிக்க வேண்டும். இதுகுறித்து இயக்குநர் ஏற்கனவே நடிகையிடம் சொன்ன போது ஓகே சொன்ன நடிகை, படப்பிடிப்பு தளத்தில் இதுபோன்ற ஆபாசமான காட்சியில் நடிக்க மாட்டோன் என்று வம்பு செய்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், அந்த அரசியல் பிரமுகருக்கு போன் போட்டு, இயக்குநர் பற்றி புகார் கொடுக்க, அந்த அரசியல் பிரமுகர், அடி ஆட்களை படப்பிடிப்பு தளத்திற்கு அனுப்பி, இயக்குநரை மிரட்டி உள்ளனர். இதனால், பயந்து போன அந்த இயக்குநர் அந்த காட்சியை டூப் நடிகையை வைத்து எடுத்து படத்தை முடித்துள்ளார். இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் பரவியதை அடுத்து, இந்த நடிகையை வைத்து படம் எடுத்தால், பிரச்சனை தான் என, அந்த நடிகைக்கு படவாய்ப்பு வருவது குறைந்து போனது.
படவாய்ப்பு வராமல் போனதால், அரசியல் பிரமுகருக்கு டாடா காட்டி விட்டு அமெரிக்க தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவிலேயே செட்டிலானார். ஆனால், ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அதுபோல நடிகைக்கு அமெரிக்கா செட்டாகாததால், கணவரை விட்டு பிரிந்து சென்னையில் வசித்து வந்தார். இதையடுத்து, மீண்டும் அந்த அரசியல் பிரமுகரின் உதவியை நாடி சென்று, கணவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் அந்த பிரமுகரின் அரவணைப்பில் இருந்து வருகிறார். அந்த பிரமுகரின் மனைவியும் அண்மையில் இறந்துவிட்டதால், அந்த பிரமுகரும் அந்த சிட்டெறும்பு நடிகைக்கு தனி பங்களா வாங்கிக்கொடுத்து கவனித்து வந்தார். ஆனால், சமீப காலமாக அந்த பிரபல நடிகை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.