கதை புடிச்சிருந்தா.. அதுக்கு ஓகே சொல்லுவேன்.. வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை..!

கதை புடிச்சிருந்தா.. அதுக்கு ஓகே சொல்லுவேன்.. வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை..!

பிரியங்கா மோகன் ஆரம்ப நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் 2019-ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ஒந்த் கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

மேலும் அதே ஆண்டின் பிற்பகுதியில் நாணியின் கேங் லீடர் தெலுங்கு படத்தின் நடித்த இவருக்கு தெலுங்கில் அதிகளவு ரசிகர்கள் அதிகரித்தார்கள். மேலும் மாயம் என்ற இரு மொழி திரைப்படத்திற்கான ஆங்கில பதிப்புக்காக இது ஒளிப்பதிவு செய்யப்பட்டது எனவே படம் தாமதமானது.

தமிழைப் பொறுத்த வரை 2021-ஆம் ஆண்டு நெல்சன் திலீப் குமார் இயக்கிய சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வந்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். முதல் படமே முன்னணி கதாநாயகன் உடன் என்பதால் இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததை அடுத்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் இந்த படம் அதிகளவு வசூலை தந்ததை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

அந்த வகையில் இவர் மீண்டும் சிவகார்த்திகேயனோடு டான் படத்தில் நடித்திருக்கிறார். அதனை அடுத்து தனுஷோடு இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய பிரியங்கா மோகன் அண்மையில் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அந்த பேட்டியின் போது தொகுப்பாளினி பிரியங்கா மோகனிடம் ஒரு திரைப்படத்தில் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

அந்த கேள்விக்கு சற்றும் சளைக்காத பிரியங்கா மோகன் கதை திருப்தியாக சிறப்பாக இருந்தால் கண்டிப்பாக ஓகே என்று சொல்லி விடுவேன் என சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளிவிட்டார்.

இதனை அடுத்து அடுக்கடுக்காக பல கேள்விகள் கேட்கப்பட்டதை அடுத்து அந்தக் கேள்விகளுக்கும் பொறுமையாகவும் நிதானமாகவும் பதில் அளித்த பிரியங்கா மோகன் விரைவில் இன்னும் பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆவார் என தெரிய வந்துள்ளது.

அத்தோடு ஹீரோ ஒருவருக்கு சப்போர்ட்டிங் ரோல் செய்ய அழைப்பு கிடைத்தால் செய்வீர்களா என்று கேட்டதற்கு சற்று யோசித்த அவர் அது கதையை பொறுத்தது அப்படி தேவை என்றால் செய்வேன் என்றும் சொல்லிவிட்டார்.

இதனை அடுத்து தற்போது பிரியங்கா மோகனின் இந்த ஓபன் டாக் இணையத்தில் வைரலாகி மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

LATEST News

Trending News

HOT GALLERIES