ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து உண்மையாம்.. விரைவில் வெளியாகும்!! பிரபல கொடுத்த ஷாக்கிங் நியூஸ்..
சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கிறது. எந்த நாளில் எந்த பிரபலங்கள் விவாகரத்து அறிவிப்பார்கள் என்பது கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு விவாகரத்து தகவல் வருகிறது. இந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளனர், ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினர். சில பத்திரிக்கைகளில் ஜெயம் ரவி - ஆர்த்திக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது என்றும் விரைவில் விவாகரத்து தொடர்பான தகவலை அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இவர்களின் விவாகரத்துக்கு பல காரணங்கள் பத்திரிக்கையாளர்கள் பலர் விமர்சித்து பேசி வருகிறார்கள். தற்போது அந்தணன் பேசிய ஒரு வீடியோவில், நாங்கள் விசாரித்த வரைக்கும் ஜெயம் ரவி - ஆர்த்தி இருவருக்கும் இடையே சண்டை இருப்பது உண்மை தான் என்று கூறுகிறார்கள்.
விரைவில் ஆதாரப்பூர்வமான செய்திகள் இதுதொடர்பாக வெளியாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே ஜெயம் ரவி மீது ஆர்த்தி சந்தேகப்பட்டது தான். ஷூட்டிங்கில் கால் செய்து கொண்டே அவரை டார்ச்சர் செய்தது அவரை கோபப்பட வைத்திருக்கிறது.
இரு குடும்பத்தினரும் சேர்ந்து அவர்களை சமாதானப்படுத்தி சேர்த்து வைக்க பேச்சுவார்த்தைகளும் மறுப்பக்கம் சென்று கொண்டிருக்கிறது. இருவருக்கும் பிரச்சனை இருப்பதும் விவாகரத்து முடிவுக்கு வந்ததெல்லாம் உண்மை தான், இருவரும் சேர்ந்துவிட்டால் நல்லது.
இந்த விஷயத்தில் தனுஷ் தான் காரணம் என்று சிலர் கூறுவதில் உண்மையில்லை. கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு ஆயிரம் காரணம் இருக்கும். தனுஷை காரணம் சொல்லுவது நியாமில்லை, சந்தப்பட்ட இருவரில் இருவர் பெண். அவருக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. எதிர்காலமும் இருக்கிறது.
அதையெல்லாம் யோசிக்காமல் தனுஷை இழுத்துவிடுவது சரியில்லை, இது அவர்கள் மீது தவறான இமேஜை கொடுத்துவிடும் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.