மற்றவர்களை போல் வடிவேலு இல்லை!! ரகசியம் உடைத்த பாவா லட்சுமணன்..

மற்றவர்களை போல் வடிவேலு இல்லை!! ரகசியம் உடைத்த பாவா லட்சுமணன்..

வைகை புயல் வடிவேலு மற்றும் பாவா லட்சுமணன் இணைந்து நடித்துள்ள காமெடி காட்சிகள் இன்றளவும் மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்துள்ளது.

பாவா லக்ஷ்மணன் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பாவா லட்சுமணன் நடிகர் வடிவேலு குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், வடிவேலு ஓகே சொன்னதால் தான் மாயி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன் மூலமாக தான் பிரபல நடிகராக அறிமுகமானார். வடிவேலுவை பொறுத்தவரை அவருடன் நடிப்பவர்கள் வசனம் பேச வேண்டும் என்று நினைப்பார். மற்றவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். நடிகை சுமதி, பிரியங்கா ஆகியோர் எல்லாம் வடிவேலுவால்தான் வளர்ந்தார்கள் என்று பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.   

LATEST News

Trending News

HOT GALLERIES