நெருக்கமான காட்சியை 4 மணி நேரம் எடுத்தார்கள், சத்யராஜ் அத்துமீறினாரா..நடிகை கஸ்தூரி ஓபன் டாக்
சத்யராஜ் நடிப்பில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த அமைதிப்படை படத்தை ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சத்யராஜ் கஸ்தூரிக்கு அல்வாவில் மயக்கம் மருந்து கொடுத்து கற்பழித்துவிடுவார். அந்த காட்சியில் நடித்தது குறித்து உங்களுடைய கருத்து என்ன? சத்யராஜ் மோசமாக நடந்து கொண்டாரா என்று கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பினார்கள்
இது தொடரப்பாக பேசிய கஸ்தூரி, சத்யராஜ் மிகவும் நல்ல மனிதர். அந்த நெருக்கமான காட்சியில் நடித்தது என் நினைவில் இருக்கிறது.
அந்த சீனில் எனக்கு அசவுகரியம் இருந்ததை தெரிந்து கொண்ட சத்யராஜ் மிகவும் ஜாக்கிரதையாக நடித்தார்.
அந்த காட்சியை மட்டும் நாங்கள் 4 மணி நேரம் எடுத்தோம். நாங்கள் இதை நடிப்பாகவே நினைத்து நாங்கள் நடித்தோம் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.