குடிபோதையில் என் அண்ணன்களே அதை பண்ணாங்க!! நடிகை பகீர் தகவல்..
தமிழில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சங்கீதா தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். பாடகர் கிரிஷ்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்ட சங்கீதா, தன் குடும்பத்தினர் தனக்கு செய்த கொடுமைகளை பகிர்ந்துள்ளார்.
சமூதாயத்தில் தான் பிரச்சனை நடக்கும் என்பார்கள். ஆனால் எனக்கு என் குடும்பத்தினரே பிரச்சனை செய்தார்கள். நான் சம்பாதித்த பணத்தை என் குடும்பத்தினர் எடுத்துக்கொள்வார்கள்.
என் அண்ணன்களே என் பணத்தை நாசம் செய்தார்கள் என்றும் குடிபோதையில் என்ன செய்கிறோம் என்பது கூட தெரியாமல் என் பணத்தை செலவு செய்து வந்தார்கள் என்றும் தெரிவித்தார்.
அவர்களுக்கு செலவு செய்ய வேண்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் சேமிப்பு என்பதே கிடையாது. என் அம்மா கூட என் பணத்தை என் அனுமதியில்லாமல் எடுத்துக் கொள்வார்கள்.
பிளாங்க் செக்கில் கையெழுத்து வாங்கிக் கொள்வார்கள். கிரிஷை திருமணம் செய்தப்பின் தான் எல்லாமே என் வாழ்க்கையில் மாறி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியதாக நடிகை சங்கீதா ஓப்பனாக கூறியிருக்கிறார்.