ஜன்னல் இல்லாத ரூம்.. சிவாஜி மகன் படத்தில் அட்ஜெஸ்ட் செய்த பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சுகன்யா. டாப் ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சுகன்யா திருமணமாகி ஒரே ஆண்டில் கணவரை விவாகரத்து செய்து தற்போது வரை தனியாக வாழ்ந்து வருகிறார்.
குணச்சித்திர ரோலில் நடித்து வரும் சுகன்யா பற்றி பிரபல தயாரிப்பாளர் டி சிவா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். சுகன்யா பண்ண அந்த விஷயத்தை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கூட பண்ணமாட்டாங்க. சின்ன மாப்ளே படத்தின் ஷூட்டிங்கின் போது கோபி செட்டிப்பாளயத்தில் நடந்தது.
எல்லோரும் தங்குவதற்கு லாட்ஜில் எல்லாம் புக் பண்ணிட்டேன். அப்போது இன்னொரு படம் நடுவில் புகுந்து ரூம்ஸ் நான் நினைத்தது போல் கிடைக்கவில்லை. நார்மல் ரூம் கூட கிடைக்காமல் கட்டி முடித்த ஒரு ரூம் கொடுத்தார்கள். ஜன்னல் கூட போடவில்லை. வேறு வழியில்லாமல் அந்த ரூமை சுகன்யாவுக்கு கொடுத்தேன்.
சுகன்யா அப்பா, அம்மாவை கூட்டிச்சென்று கூட காமித்தேன். நாங்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறோம் என்று அந்த ஜன்னல்களின் சேலை, வேட்டியை வைத்து மறைத்து தங்கி படத்தை முடித்து கொடுத்தார் சுகன்யா என்று கூறியிருக்கிறார் டி சிவா.