4 வருடம் அட்ஜெஸ்ட் செய்து கணவரை விவாகரத்து செய்த நடிகை...இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா..

4 வருடம் அட்ஜெஸ்ட் செய்து கணவரை விவாகரத்து செய்த நடிகை...இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா..

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கிருத்திகா. இவர் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது விவாகரத்து குறித்தும் மகனை குறித்தும் ஓப்பனாக பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், தனக்கு 8 வருடத்திற்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

அவர் என்னை நடிக்கக்கூடாது என்று சொல்லவில்லை, 9 மாதம் கர்ப்பமாக இருக்கும் போது முந்தானை முடிச்சு சீரியலில் நடித்திருந்தேன். பின் மகன் பிறந்த போது, அவர்கள் வேறு நடிகையை எனக்கு பதில் நடிக்க வைத்தனர்.

3 மாதம் தேவைப்பட்டது. அதையும் தாண்டி எனக்கும் கணவருக்கும் பல பிரச்சனை, குடும்பத்தில் சண்டை என்று சென்றுவிட்டது. என் அம்மா வளர்ப்பு சரியில்லை என்று கூறியதும் நானே முடிவெடுத்துவிட்டேன்.

கல்யாணமாகி 1 ஆண்டிலேயே பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. என் அம்மா சிங்கிள். அப்பா இருக்கிறார், ஆனால் இருவரும் பிரிந்துவிட்டார்கள். என் அம்மாவை யாரிடமும் விட்டுக் கொடுக்கமாட்டேன். அடி போன்ற பிரச்சனைகள் வந்தும் அம்மாவிடம் கூறமாட்டேன். அவரை தப்பு சொல்லவில்லை, அவரை குறை சொல்லவும் இல்லை. அவரையும் என்ன நடந்தது என்று கேட்டால் தெரியும் என்று பலர் என்னை விமர்சித்தார்கள்.

மகன் பிறந்து இரண்டாவது மாதத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தேன். 10 நாட்கள் ICU-வில் இருந்தேன். இது உமாமகேஸ்வரி என்று தான் மீடியாவில் செய்திகள் வந்தது. விமர்சிப்பவர் என் வாழ்க்கைக்குள் வந்து பார்த்தால் தான் தெரியும் என்று தெரிவித்திருக்கிறார் நடிகை கிருத்திகா.

ஒல்லியாக மாறி இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் கிளாமர் காட்டியபடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தன் மகனுடன் எடுத்த புகைப்படத்தையும் அவுட்டிங் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News