அந்த விசயத்தில் 15 படம் பண்ணால் தான் கிடைக்கும்.. ஆனா!! புலம்பிய 49 வயது கமல் பட நடிகை..

அந்த விசயத்தில் 15 படம் பண்ணால் தான் கிடைக்கும்.. ஆனா!! புலம்பிய 49 வயது கமல் பட நடிகை..

பாலிவுட் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரவீனா தாண்டன், Patthar Ke Phool நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகி ஃபிலிம் ஃபேர் விருதும் வாங்கினார். அதன்பின் அடுத்தடுத்த இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் 1995ல் வெளியான Saadhu படத்திலும் நடிகர் கமலின் ஆளவந்தான் படத்திலும் நடித்து அறிமுகமாகினார்.

அதன்பின் தமிழில் வாய்பில்லாமல் இந்தி படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஒரு வருடத்திற்கு 10 படங்களில் நடித்து வந்த ரவீனா, பிரம்மாண்ட படமாக அமைந்த கேஜிஎஃப் 2 படத்தில் ரமைக்கா சென் ரோலில் நடித்து மிகப்பெரிய இடத்தை பிடித்தார். தற்போடு ஒருசில படங்களில் நடித்து வரும் 49 வயது ரவீனா தாண்டன், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சம்பள விசயம் பற்றி பகிர்ந்துள்ளார்.

நடிகர்களைவிட நடிகைகளுக்கு கொடுக்கும் சம்பளம் பல மடங்கு குறைவு என்று புலம்பி இருக்கிறார். அவர் கூறியது, நான் கதாநாயகியாக நடித்த சமயத்தில் கதாநாயகன்கள், கதாநாயகிகளுக்கு வழங்கும் சம்பள விசயத்தில் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நிறைய பாகுபாட்டினை காட்டினார்கள். ஒரு நடிகர் ஒரு படத்தில் சம்பாதித்ததை, நாங்கள் 15 படங்கள் நடித்தால் தான் சம்பாதிக்க முடிகிறது.

எல்லா ஹீரோக்களையும் சொல்லவில்லை என்றாலும் பல நடிகர்கள் அதிகமாகவே சம்பளம் வாங்குகிறார்கள். நடிகைகள் படங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு நடித்தனர். அப்போது சினிமா வாழ்க்கையில் திட்டமிடல் இல்லாமல் இருந்தது, ஆனால் இப்போது நடிகைகள் மிகவும் திட்டமிட்டு முன்னேறுகிறார்கள். கதைத்தேர்வில் மட்டுமில்லாமல் சம்பள விசயத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருக்கிறார்கள் என்று ரவீனா தாண்டன் கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES