“இந்த நடிகையின் தம்பி தான் என்னோட முன்னாள் காதலன்..” இடியை இறக்கிய ஷகீலா..!

“இந்த நடிகையின் தம்பி தான் என்னோட முன்னாள் காதலன்..” இடியை இறக்கிய ஷகீலா..!

மலையாளத் திரைப்படமான ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகம் ஆன நடிகை ஷகிலா பல அடல்ட் படங்களில் நடித்து கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்ட நடிகை.

இவரது நடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னட, ஹிந்தி படங்கள் வெளியாகி உள்ளது. இவரது அற்புதமான குணச்சித்திர நடிப்பை மறுமலர்ச்சி திரைப்படத்தில் விவேக்குக்கு ஜோடியாக நடித்ததலின் மூலம் பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

நடிகை ஷகிலா குணச்சித்திர வேடங்கள் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருக்கிறார். அந்த வகையில் ஜெயம் அழகிய தமிழ் மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்றவற்றில் இவரது நகைச்சுவை திறன் வெளிப்பட்டிருக்கும்.


திரை உலகில் இருக்கும் அனைவரும் இவரை சைக்லோன் மற்றும் லேடி லால் என்ற அடைமொழிகளை தந்து அழைத்து வருகிறார்கள். தற்போது பெரிய அளவு திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் இவர் you tube சேனல்களுக்கு அடிக்கடி பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர் தன் முன்னாள் காதலன் பற்றி கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். மேலும் இந்த காதலன் தனது இரண்டாவது காதலின் கதாநாயகன் என்று கூறியதோடு தற்போது அவர் ஹீரோவாக நடித்து வருகிறார் என்று கூறிய விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது.


அப்படி அந்த நடிக்கின்ற ஹீரோ நடிகர் யார் என்று ரசிகர்கள் அனைவரும் கண்டுபிடிக்க திணறி வரக்கூடிய சமயத்தில் அவரும் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் நடிகர் அஜித்தின் நெருங்கிய உறவினர் என்று கூறியதை அடுத்து ரசிகர்கள் அந்த நடிகர் யார் என்பதை கண்டுபிடித்து விட்டார்கள்.

1990-களில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் ரிச்சர்ட் ரிஷி, தற்போது பல மொழி படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளி வந்த திரௌபதி, பரமபத விளையாட்டு, ருத்ரதாண்டவம், சில நொடிகள் போன்ற படங்களில் இவர் ஹீரோவாக நடித்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.


மேலும் ஷகிலாவின் 15ஆவது வயதில் இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகியதாகவும் அப்போதே இவர் ஐ லவ் யூ என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் இன்று வரை நட்போடு பழகி இருக்கும் இவர்கள் இருவரும் எதிர்காலத்தில் வாய்ப்பு இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பேசியதாகவும் பேட்டியில் பகிர்ந்து இருப்பது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

தற்போது வரை நல்ல நண்பர்களாக விளங்கும் இவர்கள் இருவர் இடையே இப்படிப்பட்ட ஒரு ரகசியம் இருந்ததா? இப்படி ஒரு இடியை இறக்குவார் என்று யாரும் எதிர்பார்க்காத வேளையில் இவர் தான் என் முன்னாள் காதலன் என்று பேசிய பேச்சு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES