சம்பளத்தை வாங்க மறுத்த நடிகை சம்யுக்தா மேனன்..! காரணம் தெரிந்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!

சம்பளத்தை வாங்க மறுத்த நடிகை சம்யுக்தா மேனன்..! காரணம் தெரிந்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!

தென்னிந்திய திரைப்பட படத்தில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்க கூடிய சம்யுக்தா மேனன் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார்.

2015 ஆம் ஆண்டு பாப்கான் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள மொழியில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் 2018 ஆம் ஆண்டு தீவண்டி என்ற திரைப்படத்தில் நடித்து புகழடைந்தார்.

தமிழ் திரை உலகை பொருத்த வரை 2018 ஆம் ஆண்டு வெளி வந்த களரி என்ற திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார்.
இதை அடுத்து தனுஷோடு இணைந்து வாத்தி திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் மேலும் பல வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் நடித்து வரக்கூடிய இவர் அண்மையில் நடித்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து சம்பளத்தை வேண்டாம் என்று நிராகரித்து இருக்கக்கூடிய விஷயம் தயாரிப்பாளர்களின் மத்தியில் பெருத்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எடக்காடு பட்டாலியன் பட தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் சம்யுக்தா மேனன் பற்றி கூறும் போது தனது 12 வருட சினிமா அனுபவத்தில் இது போல் ஒரு நடிகையை பார்த்ததே இல்லை.

எடக்காடு பட்டாலியன் படத்தை தயாரிப்பதற்கு முன்பு எட்டு படங்களும் அதற்குப் பிறகு இரண்டு படங்களும் தயாரித்த தயாரிப்பாளராகிய நான் எடக்காடு பட்டாலியன் படத்தில் சம்யுக்தாவை ஹீரோயினியாக நடிக்க வைத்திருந்தேன்.


படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு சம்யுக்தாவிற்கு 65 சதவீதம் மட்டுமே சம்பளம் கொடுத்திருந்தேன். இதனை அடுத்து சம்யுக்தாவிடம் போன் பண்ணி மீதி பணத்தை கொடுக்க சற்று அவகாசம் தேவை என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் எந்த பிரச்சனையும் இல்லை பார்த்துக் கொள்ளலாம் என்று பதிலளித்தார்.

இதனை அடுத்து படம் ரிலீஸ் ஆன பிறகு இரண்டாவது நாள் சம்யுக்தா எனக்கு படம் தோல்வின்னு மெசேஜ் அனுப்பினாங்க. அதுமட்டுமல்லாமல் இந்த படம் வெற்றி பெறாத சூழ்நிலையில் நீங்கள் கடுமையான பொருளாதார சிக்கல்களில் இருப்பீர்கள்.

மேலும் இந்த படத்தால் பொருளாதார பயனையும் பெற்றிருக்க மாட்டீர்கள். எனவே எனக்கு தர வேண்டிய மீதி பேலன்ஸ் பணம் எனக்கு வேண்டாம் நீங்கள் கட்டாயப்படுத்தினாலும் நான் வாங்க மாட்டேன்.

அடுத்த முறை இருவரும் ஒன்று சேர்ந்து படத்தை பண்ணலாம். அந்த படம் வெற்றி தரும் போது எனக்கு உரிய பணத்தைப் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி மெசேஜ் செய்திருந்தார். இதனை அடுத்து இவருக்கு எவ்வளவு நல்ல மனது உள்ளது அதற்காக தலை வணங்க வேண்டும்.

முழு சம்பளம் கிடைத்தால் மட்டுமே டப்பிங் மற்றும் பிரமோஷனுக்கு வருவேன் என்று சொல்லக்கூடிய நடிகர் நடிகைகள் இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் இவரை போல் வேறு எவரையும் பார்க்க முடியாது என்று சொல்லக் கூடிய வகையில் இவரது செயல் உள்ளது.


மேலும் ஒரு வருடத்திற்கு 300-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகும். கேரளாவில் 5 சதவீத படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது. மலையாள சினிமாவிற்கு இது போல நடிப்பவர்கள் இருந்தால் தயாரிப்பாளர்கள் வாழ முடியும் என தயாரிப்பாளர் கூறியிருந்தார்.

இதனை அடுத்து இணையத்தில் 65% மட்டுமே பணத்தைப் பெற்றுக் கொண்டு மீதி பணத்தை வேண்டாம் என்று சம்பளத்தை வாங்க மறுத்த நடிகையின் காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள் சம்யுக்தா மேனனை பாராட்டி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES