கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வெளியிட்ட புகைப்படம்.. டீம்ல அப்போ இவுங்க இல்லையா...
கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை குமரன் வெளியிட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ளது.
அண்ணன் -தம்பிகளின் பாசத்தை சொல்லும் இந்த சீரியலில் குடும்ப உறவுகளின் மகத்துவமும் சிறப்பாக எடுத்துக் காட்டி வருகின்றது.
இதனை தொடர்ந்து இதே போல் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் நிறைவடைந்து அதன் இரண்டாம் பாகம் துவங்கவுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 5 வருடங்களாக வெற்றிக்கரமாக சென்றுக் கொண்டிருந்த நிலையில் 1500 எபிசோட்களை தாண்டி ரசிகர்களை கவர்ந்து இருக்கின்றது.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆம் பாகம் ஆரம்பமாகி முதல் ப்ரோமோவும் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.
இதில் நடித்த தனம், கதிர், சரவணன், முல்லை, மீனா, ஐஸ்வர்யா இப்படி யாரும் இரண்டாம் பாகத்தில் இல்லை. இதனால் கடைசியாக இவர்கள் வெளியில் சென்றுள்ளார்கள்.
இதன்போது கதிர், தனம், ஐஸ்வர்யா எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ முல்லை எங்கே?” என விசாரித்து வருகின்றார்கள்.
அத்துடன் புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றார்கள்.