'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு இணையான கிளாமர்.. சாயிஷாவின் 'பத்து தல' பாடல் வீடியோ..!

'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு இணையான கிளாமர்.. சாயிஷாவின் 'பத்து தல' பாடல் வீடியோ..!

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலில் உச்சகட்ட கிளாமர் காஸ்ட்யூம் உடன் சமந்தா நடனம் ஆடி இருப்பார் என்பதும் அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பாடலுக்கு இணையாக நடிகை சாயிஷா ’பத்து தல’ திரைப்படத்தில் நடனமாடிய வீடியோ சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்

‘ராவடி’ என்று தொடங்கும் இந்த பாடலுக்கு நடிகை சாயிஷா அட்டகாசமாக நடனமாடி உள்ளார் என்பதும் கிளாமர் உடையில் அவரது நடனம் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பாடலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முத்துக்குமாரும் இடம் பெற்றுள்ளார். சினேகன் பாடல் வரிகளில் சுபா மற்றும் நிவாஸ் குரலில் உருவான இந்த பாடலை இசைப்புயல் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES