அகநக அகநக முக நகயே.. 'பொன்னியின் செல்வன் 2' பாடல் ரிலீஸ்..!

அகநக அகநக முக நகயே.. 'பொன்னியின் செல்வன் 2' பாடல் ரிலீஸ்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இன்று இந்த படத்தின் ’அகநக முகநக’ என்ற பாடல் வெளியாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது

அந்த வகையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இசை புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான இந்த பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார் என்பதும் சக்திஸ்ரீ கோபாலன் இந்த பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மெலடி பாடலாக அமைந்துள்ள இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:

அகநக அகநக முக நகயே
முகநக முகநக முக நகயே
முருநக முருநக தருநகயே
தருநக தருநக வருநகயே
யாரது யாரது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES