தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' பர்ஸ்ட் சிங்கிள்: செம வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' பர்ஸ்ட் சிங்கிள்: செம வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

தனுஷ் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் 24-ஆம் தேதி முதல் வெளியாகும் என்றும் இந்த பாடலின் டைட்டில் ’தாய்க்கிழவி’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவில் ’நாட்டாமை’ படத்தில் தாய்க்கிழவி என்ற கேரக்டரில் வரும் வீடியோவை அனிருத் பார்த்துக் கொண்டிருப்பது போன்றும், அப்போது டான்ஸ் மாஸ்டர் இந்த பாடலின் டைட்டில் என்ன என்று கேட்பதுமான காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன.

மேலும் இந்த பாடலை தனுஷ் எழுதியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தனுஷ் மற்றும் அனிருத் இணையம் இந்த படத்தின் பாடல்கள் உண்மையாகவே ஸ்பெஷலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் 18ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ள இருக்கும் இந்த படத்தில் தனுஷ், இயக்குனர் இமயம் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷிகண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

LATEST News

HOT GALLERIES