'விக்ரம்' தமிழ்நாட்டின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா? உதயநிதி கூறிய ஆச்சரிய தகவல்!

'விக்ரம்' தமிழ்நாட்டின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா? உதயநிதி கூறிய ஆச்சரிய தகவல்!

கமலஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்தின் தமிழக ஷேர் தொகையை உதயநிதி ஸ்டாலின் கூறியதை பார்த்து திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. ’விக்ரம்’ படம் ரிலீசாகி மூன்றாவது வாரம் ஆகியும் இன்னும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் டிக்கெட் கிடைக்காமல் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசிய போது ’மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் ’விக்ரம்’ திரைப்படம் இதுவரை 75 கோடி ரூபாய் தமிழகத்தில் ஷேர் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு தெரிந்து எந்த தமிழ் சினிமாவும் இவ்வளவு பெரிய ஷேர் பெற்றது இல்லை என்றும் இன்னும் நான்கு முதல் ஐந்து வாரங்கள் வரை இந்த படத்தின் வசூல் பிரமாதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

LATEST News

Trending News

HOT GALLERIES