'சூர்யா 41' படத்தில் இணைந்த சுதா கொங்காராவின் இரண்டு மகள்கள்?

'சூர்யா 41' படத்தில் இணைந்த சுதா கொங்காராவின் இரண்டு மகள்கள்?

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. கன்னியாகுமரி அருகே முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் சுதா கொங்காராவின் இரண்டு மகள்கள் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘சூர்யா 41’ திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் என்ற பணியில் சுதா கொங்காரா பணியாற்றிய நிலையில் தற்போது அவர் ’சூரரைப்போற்று’ ஹிந்தி ரீமேக் படத்தின் பணியில் சுறுசுறுப்பாக இருப்பதால் அவருக்கு பதிலாக அவருடைய இரண்டு மகள்கள் ’சூர்யா 41’ படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிந்து வருவதாகவும் இருவருமே சுறுசுறுப்பாக படக்குழுவினர்கள் மத்தியில் வேலை வாங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சூர்யா இந்தப் படத்தில் மீனவர் கேரக்டரில் நடித்திருப்பது மட்டுமின்றி அந்த ஊரில் நடக்கும் அனைத்து அநியாயங்களை தட்டிக்கேட்கும் ஒரு நேர்மையான இளைஞராகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டி, ஒரு சுற்றுலா பயணிகளுக்கான கைடு கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் தயாராகி வரும் ‘சூர்யா 41’ திரைப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

LATEST News

Trending News