'அஜித்தின் 'ஏகே 61' படத்தில் இணைகிறாரா இந்த தமிழ் ஹீரோ?

'அஜித்தின் 'ஏகே 61' படத்தில் இணைகிறாரா இந்த தமிழ் ஹீரோ?

அஜித்தின் அடுத்த திரைப்படமான ‘ஏகே 61’ என்ற படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் நடிகை மஞ்சுவாரியர் கலந்துகொள்வார் என்றும் அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிக்கவுள்ள ’ராஜதந்திரம்’ நடிகர் வீரா மற்றும் ’சார்பட்டா பரம்பரை’ நடிகர் ஜான் கொகைன் ஆகியோர்களும் விரைவில் படப்பிடிப்பில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அஜீத்தை பிரபல தமிழ் ஹீரோ ஆதி சமீபத்தில் சந்தித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து அஜித்தின் ‘ஏகே 61’ திரைப்படத்தில் ஆதியும் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இதற்கான அறிவிப்பை விரைவில் ‘ஏகே 61’ படக்குழுவினர்கள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ஆதி தற்போது ‘கிளாப்’, ‘தி வாரியர்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எச்.வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் ஒரு வங்கிக் கொள்ளை கதையம்சத்தில் கொண்டுள்ளதால் இன்னும் ஒரு சில முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News