நேற்று ரிலீஸ் ஆக வேண்டிய 'ஐங்கரன்' படத்திற்கு என்ன ஆச்சு? நல்ல தகவல் கூறிய ஜிவி பிரகாஷ்!

நேற்று ரிலீஸ் ஆக வேண்டிய 'ஐங்கரன்' படத்திற்கு என்ன ஆச்சு? நல்ல தகவல் கூறிய ஜிவி பிரகாஷ்!

ஜிவி பிரகாஷ் நடித்த ‘ஐங்கரன்’ திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில் அவ்வப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் அதாவது மே 6ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு மே 12ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று இந்த படம் ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் நேற்று ரிலீஸ் ஆகவில்லை.

இந்த நிலையில் சற்று முன்னர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விட்டது என்றும், தற்போது கேடிஎம் ரிலீஸ் ஆகிவிட்டது என்றும், அனைத்து திரையரங்குகளிலும் தற்போது காட்சிகள் தொடங்கி விட்டன என்றும், இந்த செய்தியை அனைவரிடத்திலும் தெரிவிக்கவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படம் ரிலீஸ் ஆக உதவிய தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்றி என்றும் குறிப்பாக லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் அவர்களுக்கு எனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் ரமேஷ் பிள்ளை, சிவா, பிரபு, தேனப்பன், கதிரேசன், மன்னன், போஸ் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த படத்தின் பிரச்சனைகளை தீர்க்க உதவி செய்த அனைவருக்கும் தனது நன்றியை என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சற்று முன்னர் ‘ஐங்கரன்’ படத்தின் காட்சிகள் திரையரங்கில் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் உருவான ‘ஐங்கரன்’ படத்தில் ஜிவி பிரகாஷ், மகிமா நம்பியார், மடோனா செபாஸ்டியன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

LATEST News

Trending News