சினிமாவுக்கு வரும் ஜெயராம் குடும்பத்தின் 4வது நபர்: குவியும் வாழ்த்துக்கள்

சினிமாவுக்கு வரும் ஜெயராம் குடும்பத்தின் 4வது நபர்: குவியும் வாழ்த்துக்கள்

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் குடும்பத்தில் ஏற்கனவே மூன்று பேர் சினிமாவில் நடித்துள்ள தற்போது நான்காவது நபரும் சினிமாவில் நடிக்க வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் ஜெயராம் ஏராளமான மலையாள படங்களிலும், தமிழில் ’கோகுலம்’ ’ பிரியங்கா’ ’கோலங்கள்’ ’முறைமாமன்’ ’தெனாலி’ ’பஞ்சதந்திரம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ‘பொன்னியின் செல்வன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜெயராமனின் மனைவி பார்வதி ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பதும் 'பூவுக்குள் பூகம்பம்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நடிகர் ஜெயராம் பார்வதி தம்பதியின் மகன் காளிதாஸ் ஜெயராமன் மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழிலும் நடித்து வருகிறார் என்ற நிலையில் ஜெயராம் - பார்வதி தம்பதியின் மகள் மாளவிகாவும் தற்போது சினிமாவில் நடிக்க வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது .

மாளவிகா சமீபத்தில் ’மாயம் செய்தாயோ பூவே’ என்ற இசை ஆல்பத்தில் அசோக்செல்வன் உடன் நடித்த நிலையில் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாகவும், இதற்காக கதை கேட்கத் தொடங்கி உள்ளதாகவும் அனேகமாக அவர் மலையாள இயக்குனர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மாளவிகாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES