அஜித் படத்திற்காக தோனி ஸ்டைலில் வேலை செய்ய போகிறேன்: விக்னேஷ் சிவன்

அஜித் படத்திற்காக தோனி ஸ்டைலில் வேலை செய்ய போகிறேன்: விக்னேஷ் சிவன்

அஜித்தின் 62வது படத்தை இயக்கயிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன், ‘தல தோனி பாணியில் ’அஜித் 62’ படத்தில் பணிபுரிய இருக்கிறேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

சமீபத்தில் டெல்லி அணியை வென்ற உடன் பேட்டி அளித்த சிஎஸ்கே கேப்டன் தல தோனி, ‘பிளே ஆப் செல்வோமா? அடுத்த சுற்றுக்கு செல்வோமா? என்பது குறித்து எனக்கு கவலை இல்லை என்றும் அந்தந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும், முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று நான் தீர்மானமாக இருப்பேன் என்றும் கூறினார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது ’தோனி பாணியில் இந்த படத்தில் நான் முழுமையாக எனது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோள் என்றும் படத்தின் ரிசல்ட் மற்றும் விமர்சனங்கள் குறித்து இப்போதே நான் கவலைப்பட போவதில்லை எனவும், ரிசல்ட் எப்படி இருக்கும் என்று யோசிக்காமல் எனது வேலையை சரியாக செய்ய போகிறேன் என்றும் அதன்பிறகு ரசிகர்களின் விமர்சனங்கள் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

தல தோனியின் பாணியில் ’அஜித் 62’ படத்தை இயக்கப் போகிறேன் என்று விக்னேஷ் சிவன் கூறிய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES