வெற்றிமாறனின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட தனுஷ்!
வெற்றிமாறனின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சற்று முன் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய்சேதுபதி நடித்து வரும் ’விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் சூர்யா நடிக்கவிருக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் சோதனை படப்பிடிப்பு இடையிடையே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். ‘அனல் மேலே பனித்துளி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை கெய்சர் ஆனந்த் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணின் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில், ராஜா முகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.