பிறந்த நாளில் சாய்பல்லவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்ஹாசன்!

பிறந்த நாளில் சாய்பல்லவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்ஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 51வது தயாரிப்பு திரைப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பதும் சிவகார்த்திகேயனின் 21வது படமாக இந்த படம் உருவாக உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் இன்று இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் சற்று முன் அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

இதன்படி கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படத்தில் சாய்பல்லவி நாயகியாக நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாய்பல்லவி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக நடிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பு ஒரு சர்ப்ரைஸாக கருதப்படுகிறது. கமல்ஹாசனை சாய்பல்லவி சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES