'விருமன்' படத்தின் சூப்பர் அப்டேட்டை கொடுத்த கார்த்தி!

'விருமன்' படத்தின் சூப்பர் அப்டேட்டை கொடுத்த கார்த்தி!

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வந்த ’விருமன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்பதும் தெரிந்தது.

கார்த்தி ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்த பாடல் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண், மைனா நந்தினி, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவும், வெங்கட்ராஜா படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
 

LATEST News

Trending News

HOT GALLERIES