'தல' நடந்து வந்தால் 'பீஸ்ட்' விஜய் மாதிரி இருக்கும்: சொன்னது யார் தெரியுமா?
’தல’ நடந்து வந்தால் ‘பீஸ்ட்’ படத்தில் வரும் விஜய் மாதிரி இருக்கும் என பெங்களூர் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்
ரசிகர்களால் ’தல’ என்று அன்புடன் அழைக்கப்படும் தோனி களத்தில் இறங்கினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை தொடும் என்றும் அவர் மிகச்சிறந்த பினிஷர் என்பதை இப்போதும் நிரூபித்து உள்ளார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சென்னை அணியில் விளையாட வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஆசையுடன் காத்திருக்கும் தினேஷ் கார்த்திக், ‘தல' தோனி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்
தல தோனிக்கு களத்தில் வரவேற்பு பயங்கரமாக இருக்கும் என்றும், அவர் நடந்து வந்தால் அரங்கமே அதிரும் என்றும், பீஸ்ட் பட விஜய் மாதிரி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை அணிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றும், அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்றும் தோனிக்கு தினேஷ் கார்த்திக் புகழாரம் சூட்டினார். இதனை அடுத்து விஜய் ரசிகர்களும் தோனி ரசிகர்களும் தினேஷ் கார்த்திற்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.