இரண்டு கதாநாயகிகளுடன் மிர்ச்சி சிவா

இரண்டு கதாநாயகிகளுடன் மிர்ச்சி சிவா

மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

இரண்டு கதாநாயகிகளுடன் மிர்ச்சி சிவா

மிர்ச்சி சிவா

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என். எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடித்திருக்கிறார்கள். சிறிய இடைவேளைக்கு பிறகு பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் மா.கா.பா.ஆனந்த், பக்ஸ், ஷா.ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, கே.பி.ஒய்.பாலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

 

ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் கே.குமார் தயாரித்திருக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். 

 

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

 

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES