பொன்னியின் செல்வன்' பின்னணி இசை: வைரலாகும் மாஸ் வீடியோ

பொன்னியின் செல்வன்' பின்னணி இசை: வைரலாகும் மாஸ் வீடியோ

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து முழுவீச்சில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணியில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் தீவிரமாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு காட்சிக்கு டிரம்ஸ் இசை அமைக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் போது பின்னணி இசையில் ஏஆர் ரகுமான் மிரட்டியிருப்பார் என்று தெரிய வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES