அஜித்துக்கு கோரிக்கை வைத்த பிரபல இயக்குனர்

அஜித்துக்கு கோரிக்கை வைத்த பிரபல இயக்குனர்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக இரண்டு பாடல்களுக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் நிரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

 

அஜித் - வினோத்

அஜித் - வினோத்

 

கல்லூரி பேராசிரியராக அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகின. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் மவுண்ட் ரோடு போன்று செட் ஒன்றும் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

 

ஆர்.கே.செல்வமணி

ஆர்.கே.செல்வமணி

 

இந்நிலையில் அஜித்துக்கு, இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார். அதில், நடிகர் அஜித்குமாரிடம் நேரிடையாக கோரிக்கை வைக்கிறோம், தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தி வருவதால் இங்கு இருக்கும் பெப்சி தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே சென்னையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES