ரிலீசுக்கு தயாரான அமலாபால் திரைப்படம்

ரிலீசுக்கு தயாரான அமலாபால் திரைப்படம்

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் வெளியாக தயாராகி உள்ளது.

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அதோ அந்த பறவை போல’. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

 

அமலாபால்

அமலாபால்

 

இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.வினோத்.

 

அதோ அந்த பறவை போல

அதோ அந்த பறவை போல

 

பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இந்த படம் சில காரணங்களால் வெளிவராமல் இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இத்திரைப்படத்தை வி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக வெளியிடுகின்றனர். இப்படம் விரைவில் வெளியாகும் எனவும் படம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

LATEST News

Trending News