ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் படத்தின் டைட்டில் இதுவா?

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் படத்தின் டைட்டில் இதுவா?

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, ஜெய் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று நாயகர்களும் அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று நாயகிகளும் நடித்துள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விஜய் டிவி டிடியும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் .

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது .

இந்த படத்திற்கு ’காபி வித் காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் சுந்தர் சி பாணியில் ரொமான்ஸ் மற்றும் காமெடியில் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News