பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'கூகுள் குட்டப்பா'!
பிக்பாஸ் போட்டியாளர்களான தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடித்த ’கூகுள் குட்டப்பா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
மலையாளத்தில் வெளியான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்ற பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், இந்த படத்தை ’கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் தயாரித்துள்ளார். கே எஸ் ரவிக்குமாரின் உதவியாளர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்கியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களான தர்ஷன், லாஸ்லியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பாக ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி பாடிய ’பொம்மா பொம்மா’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
இந்த நிலையில் ’கூகுள் குட்டப்பா’ படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேஸ் ரவிக்குமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, பூவையார், சுரேஷ் மேனன், ஜி மாரி முத்து உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் மற்றும் தர்ஷன், லாஸ்லியா ஆகிய இருவருக்குமே திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.