ரஜினி படத்தின் சாதனையை முறியடித்த கே.ஜி.எஃப்-2
யஷ் நடிப்பில் உலகமுழுவதும் வெளியாகி இருக்கும் கே.ஜி.எஃப் 2 படம் ரஜினி படத்தின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதியன்று யஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருந்தார். இப்படத்தில் யஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமுழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் கே.ஜி.எஃப்-2 இந்தியா முழுவதும் முதல் நாள் ரூ.134.5 கோடியும் இரண்டாம் நாள் ரூ.240 கோடியும் வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.
கே.ஜி.எஃப்-2
பொதுவாக ஒரு மொழியில் வெளியாகும் படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்து வெளியடப்படுகிறது. அந்த வகையில் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியிடப்படும் பிறமொழி படங்களில் தமிழ் படங்களே அதிக வசூலை அள்ளியுள்ளது. குறிப்பாக ரஜினி நடிப்பில் வெளியான 2.0 மற்றும் எந்திரன் ஆகிய படங்கள் ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கே.ஜி.எஃப்-2 திரைப்படம் இதனை முறியடித்துள்ளது. இப்படம் வெளியான 4 நாட்களில் தெலுங்கில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்து, ரஜினி படம் செய்த சாதனையை தற்போது முறியடித்துள்ளது.