உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி': மாஸ் அறிவிப்பை வெளியிட்டார் போனிகபூர்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'நெஞ்சுக்கு நீதி’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியானது
இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் போனி கபூர் ’நெஞ்சுக்கு நீதி’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் இந்த ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதயநிதி, ஆரி, தன்யா ரவிச்சந்திரன். சிவானி ராஜசேகர். யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையில், தினேஷ்குமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.