'கே.ஜி.எஃப் 2' படம் குறித்து நடிகர் கார்த்தியின் மாஸ் வாழ்த்து!

'கே.ஜி.எஃப் 2' படம் குறித்து நடிகர் கார்த்தியின் மாஸ் வாழ்த்து!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப் 2’ என்ற திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் தமிழ் ஊடகங்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் ’கேஜிஎப் 2’ படத்தைப் பார்த்து தங்களது சமூக வலைத்தளத்தில் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் ’கேஜிஎப் 2’ படம் குறித்து கூறியிருப்பதாவது:

ஒரு மிகப்பெரிய கற்பனையை முழுமையாக திரையில் கொண்டு வந்து கைதட்டல் வாங்குவது என்பது மிகப்பெரிய சாதனை. அந்த சாதனையை ’கேஜிஎப் 2’ திரைப்படக்குழு செய்துள்ளது. படத்தின் காட்சிகள், வசனங்கள் மற்றும் ஆக்சன் காட்சிகள் படத்தின் தரத்தை உயர்த்தி உள்ளது. ஒரு தாய் கண்ட கனவுக்கு எவ்வளவு சக்தி உள்ளது என்பதை இந்த படம் அடிக்கோடிட்டு காட்டுகிறது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES