புலிகள் என்னை புசிப்பதில்லை - மகான் படத்தின் பாடல்
மகான் படத்தில் துருவ் விக்ரம் பாடியுள்ள மிஸ்ஸிங் மீ பாடலின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
துருவ் விக்ரம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள திரைப்படம் மகான். துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.
இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மூன்று மொழிகளில் வெளியாகப்போகும் இந்த திரைப்படம் நாளை(பிப்ரவரி 10) நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மிஸ்ஸிங் மீ பாடல்
இதற்குமுன் மகான் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மகான் படத்தில் இருந்து மிஸ்ஸிங் மீ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் துருவ் விக்ரம் பாடியுள்ள மிஸ்ஸிங் மீ பாடலின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.